/ ஆன்மிகம் / கோயிலும் பிரசாதமும்
கோயிலும் பிரசாதமும்
மதுரை அழகர் கோவில் தோசைக்கு புகழ் பெற்றது; காஞ்சிபுரம் இட்லியால் மகிமை பெற்றது. திருக்கண்ணபுரத்தில் முனியோதரன் பொங்கல் பிரபலம். இது போல கோவில் பிரசாதங்களை தொகுத்து தருகிறது இந்த புத்தகம். பண்டி என்ற வித்தியாசமான பிரசாதம் பற்றியும் தகவல் இருக்கிறது. கோவில் பிரசாதத்தை வீட்டில் தயாரித்து சுவாமிக்கு படைக்க குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, சபரிமலை அரவணையை வீட்டில் செய்து பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. பிரசாதங்களை போல், இந்த புத்தகமும் இனிய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்களை எளிய முறையில் வீட்டில் தயாரித்து சுவாமிக்கு படைத்து மகிழ உதவும் அரிய பயிற்சி நுால். – தி.செல்லப்பா




