/ ஆன்மிகம் / கோயிலும் பிரசாதமும்
கோயிலும் பிரசாதமும்
குடும்பத்தில் சாதாரணமாக சமைப்பது சாதம்; அதுவே தெய்வத்திற்கு படைக்கப்படும்போது, ‘ப்ர’ என்ற அடைமொழியுடன், ‘ப்ரசாதம்’ ஆகிறது. இதில், ‘ப்ர’ என்ற பதம் தெய்வத்தன்மையுடைய என பொருள் தருகிறது. இதையே பேச்சு வழக்கில், ‘பிரசாதம்’ என்கிறோம். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வகை நைவேத்தியம் பிரபலமாக இருக்கிறது. அழகர் கோவிலில் தோசை, காஞ்சிபுரத்தில் இட்லி, திருக்கண்ணபுரத்தில் முனியோதரன் பொங்கல் பிரபலம். இதே போல பல கோவில்களின் பிரசாதப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. பண்டி என வித்தியாச பெயர் உடைய பிரசாதம் பற்றியும் தகவல் இருக்கிறது. கோவில் பிரசாதம் படைக்கப்படும் விதம் போன்ற தகவல்கள் உள்ள நுால். – தி.செல்லப்பா




