Advertisement

கலித்தொகை – மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்


கலித்தொகை – மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கச் செய்யுள் என்று தமிழ் மக்களால் நன்கு மதித்துக் கொண்டாடப் பெறும் கடைச்சங்கப் பனுவல்களுள் ஒரு பிரிவாகிய எட்டுத்தொகையில், ஆறாவதாக வைத்துப் போற்றப்படும் நூல் கலித்தொகையாகும். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என, தமிழர் வீரத்திற்கு சான்று பகறும் ஏறுதழுவல் எனும் ஜல்லிக்கட்டு பற்றிய அதிகப்படியான பாடல்களை கொண்ட கலித்தொகையானது, ‘கற்றறிந்தோர் போற்றுங்கலி’ என்று அழைக்கப்பெறும் சிறப்புக்குரியது.‘இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு’ என, கொடைத்திறத்தையும், ‘துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமுண்டோ எமக்கு’ என்று காதலையும், ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்று வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டு, சங்ககால வாழ்வியல் விழுமியங்களை எடுத்துக்கூறும் கலித்தொகையானது, ஈடிணையற்றதொரு இலக்கியம்.முதன்முதலில், 1887ல், சி.வை.தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற கலித்தொகை, நச்சர் உரையுடன் வெளியாகி, பின் பல்வேறு பதிப்புகளை கண்டுள்ளது. காலத்திற்கேற்ப பல திருத்திய பதிப்புகள் வெளியானாலும், நமது செவ்வியல் இலக்கியங்களை பிற நாட்டாரும் படித்தறியும் வண்ணம், ஆங்கில மேற்கோள்களுடன் கூடிய புதிய பதிப்புகளின் தேவையானது இன்றளவும் அதிகமே என்பதை மறுப்பாரில்லை. அவ்வகையில், பல்வேறு சுவடிகளைக் கொண்டு வெளிவந்த பதிப்புகள் பல இருப்பினும், 125 கால கலித்தொகை பதிப்பு வரலாற்றில் பல சுவடிகளை இழந்துள்ள நிலையில், சென்னைக் கீழ்திசைச் சுவடி, உ.வே.சா., நூலகங்களிலிருந்தும், மேலும் சில இடங்களிலிருந்தும் பெறப்பட்ட பல சுவடிகளின் அடிப்படையில், இதுவரை வெளிவந்துள்ள கலித்தொகையின் பல பதிப்புகளை ஒப்பாய்வு செய்து, பதிப்பின் தொடக்க நிலை, பதிப்பின் படிகள், பதிப்புமுறை, பாட வேறுபாடு, பதிப்புக்கு பயன்பட்ட சுவடிகள், காகிதப் படிகள், இதுவரை வெளிவந்த பதிப்புகள் மற்றும் கலித்தொகையின் தொடக்கம் மற்றும் இறுதியின் நிழற்படங்கள் இணைத்து, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசையில் வெளிவந்துள்ள இந்தப் பதிப்பானது, சிறந்த பதிப்புகளுள் முன்னிலைப் பெறும் ஒன்றாகும்.சங்க இலக்கிங்களில் காதல், மடலேறுதல் என்று அகப்பொருட் செய்திகளுடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்தும் அதிகம் பாடும் கலித்தொகை, பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடி. காதல் என்பது உயரிய நெறி என்பதை விளக்கும் பாடல்களில் அக்காலத் தமிழர்களின் விழுமிய பண்பு நலன்களை எடுத்தியம்புவதாக உள்ளது. வாழ்வின் பல கூறுகளை அழகாக விளக்கும் இவை, நமது பண்பாட்டுக் கருவூலமாகும்.தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு பதிப்பை வழங்கியுள்ள இப்பதிப் பாசிரியரின் முயற்சியும், அவருக்கு உதவிய மாபெரும் தமிழறிஞர்களையும் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுஇருப்பது, இந்த படைப்பின் சிறப்பைக் காட்டுகிறது. ஆங்கிலத்தில் அமைந்த விளக்கங்கள், நமது கலாசார பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்தும். கல்லூரிகள், நூலகங்களில் இருக்க வேண்டிய நூல்.– கவிதைக்காரன் ஆதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.

  • தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.

  • ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.

  • ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!

  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!

  • திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.

  • பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.