/ சிறுவர்கள் பகுதி / குலகுலையா முந்திரிக்காய்
குலகுலையா முந்திரிக்காய்
சிறுவர் – சிறுமியர் மகிழ ஏற்ற வகையில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். மென்மையும், அற நெறியும் இணைந்து சந்த நயத்துடன் எளிய சொற்களில் அமைந்துள்ளன பாடல்கள். கண்ணே பாப்பா, பசுவும் கன்றும், பட்டாம் பூச்சி வா வா, வீசும் காற்று, பூசணிக்காய், சுட்டி எலிகள் போன்ற தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. இவை தவிர, பழந்தமிழர் பண்பாட்டை உணர்த்தும் வகையில் ஐவகை நிலங்களை அறிமுகம் செய்யும் பாடல் கவர்கிறது. சிறுவர் – சிறுமியருக்கு நலமிக்க வாழ்வை வலியுறுத்தும் வகையில், ‘நலம் தரும் கீரை’ என்ற தலைப்பில், ‘நாளுக்கொரு வகை கீரையாம்; நல்ல வண்ணம் உண்டிடு; ஆயுள் பலவும் பெருகிடும்; ஆரோக்கியம் கூட வந்திரும்’ என பாடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறிவூட்டும் நுால். – ஒளி




