/ கதைகள் / குமரன் போட்ட சபதம்
குமரன் போட்ட சபதம்
மாணவ – மாணவியரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நாவல் நுால். விவசாய பின்னணியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கிறான். அதில் பிரகாசிக்க எந்தவிதமாக பாடுபடுகிறான் என்பதை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் மையப்புள்ளியை விட்டு கதை வேறு திசைக்கு மாறவேயில்லை. மனதில் ஏற்படும் எண்ணமும், அதை செயல் படுத்துவதுமே வெற்றிப் படிகளில் ஏற உத்வேகம் தரும் என்ற கருத்து பதியுமாறு விதைக்கப்பட்டு உள்ளது. நம்பிக்கையுடன் முன்னேறும் வகையில் கதாபாத்திரங்கள் வழியாக கற்பிக்கிறது. மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் மெல்லிய காதலும் ஊடாக பிணைந்துள்ளது. திருப்பங்களுடன் கதை நகர்த்தப் பட்டுள்ளது. விறுவிறுப்பான நாவல். – சீத்தலைச்சாத்தன்




