குஞ்ஞாலி
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நாவல். ஆதிவாசி பெண் குஞ்ஞாலியின் வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவள் பல்கலையில் பட்டங்கள் பெற்றும், மலையில் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்தாள். கல்லுாரியில் படித்த காலத்தில் தடகள வீராங்கனையாக விளங்கினாள். உணர்வுகளால் கட்டப்பட்டவருக்கு தடகள பயிற்சியாளருடன் உறவு ஏற்படுகிறது. பின், மற்றொருவனை திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. தவறான பழக்க வழக்கம் உள்ள கணவனை கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.இந்திய விடுதலைப் போராட்டக் காலம், கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியலையும் மெல்லிய இழைபோல் எடுத்துரைக்கிறது. மலைவாழ் மக்களின் நிலத்தை பறித்து காடு, மலைகளை வளைத்துக் கொள்வதையும், அதை மீட்க நடக்கும் போராட்டத்தையும் சொல்கிறது கதைக்களம். உரையாடல்கள் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வயநாட்டு மலைப்பகுதியில் உலவியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.– முகிலை ராசபாண்டியன்