/ தீபாவளி மலர் / லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2017!
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2017!
ராமர் – சீதை, லக் ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் அடங்கிய அட்டைப் படத்துடன் கூடிய இந்த தீபாவளி மலர் புத்தகம், நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.அருள் வாக்கு புராணம், கலாசாரம், வாழ்வியல், சிறுகதை, பயணம், நகைச்சுவை, சினிமா, நினைவுகள் மற்றும் இலக்கியம் என, சிறு சிறு தலைப்புகள் கொடுத்து, பல்துறை பற்றிய கட்டுரைகள் பல, இதழ் முழுவதும் நிரம்பி வழிகின்றன.படிப்பவர்களுக்கு சோர்வு ஏற்படா வண்ணம், பக்கத்துக்குப் பக்கம் துணுக்குகள், புகைப்படங்கள், புதிர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.