/ கட்டுரைகள் / LEADING WITHOUT LICENCE

₹ 140

ஜன லோக்பால் மசோதா என்ற விவகாரத்தைக் கையில் எடுத்து, திடீரென தலைமைப் பதவியை அடைந்த அன்னா ஹசாரே வழி எப்படிப்பட்டது என்ற விஷயத்தை ஆய்வு செய்யும் நூல். அரசைப் பற்றியோ, ஹசாரேயைப் பற்றியோ, ஏன் இந்த இயக்கம் உருவானது என்பது பற்றிய வரலாற்று விஷயங்களையோ ஆராய போவதில்லை என்று முன்னுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.நூல் ஆசிரியர்கள் இருவரில், சதீஷ் நமசிவாயம் தமிழர்.தமிழறிஞர் துரை நமசிவாயத்தின் மகன். ஹார்வர்டு பல்கலையில் பயின்று நிர்வாகத்துறையினருக்கு முக்கிய ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருக்கும் அமெரிக்கத் தமிழர். அதே போல சிவராமும் இத்துறையில் வித்தகர்.யாருக்காவது தலைமைப் பதவியை பிடிக்க ஆசை இருந்தால், இந்த நூலை படிக்கலாம் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.அமெரிக்காவில் பெண்கள் ஓட்டுரிமை பெற அலைஸ்பால் என்ற பெண்மணி போராடி, 95 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை பணிய வைத்து, பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்தார் என்பதை இந்த நூலில் காணலாம்.அதை விளக்கும் ஆசிரியர் ஜனலோக்பாலை வலியுறுத்தும் ஹசாரே, இந்தியாவின் எல்லா மட்டத்திலும் உள்ள ஊழலை எதிர்த்து ஏன் போரிட முன் வரவில்லை? என்ற கேள்வியை எழுப்புகிறார். ஜனலோக்பால் மசோதாவுடன் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் அவர் வலியுறுத்தலாமே என்றும் யோசனை கூறுகிறார்.உப்பு சத்தியாகிரகத்தில், காந்திஜி சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளோரை அரவணைத்து, அதை வலியுறுத்தி செயல்பட்டதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.வர்த்தகர்கள், பணக்காரர்கள், மத்திய தர மேல்தட்டு மக்கள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட சாதாரண மனிதர்கள், மதஅபிமானிகள் ஆகிய எல்லோரையும் லஞ்சத்திற்கு எதிராக ஊழலற்ற "தங்க மனிதர்களாக ஆக்குவதற்கான திட்டம், வழிமுறைகள் வந்தால், மக்களை வழிநடத்துவதற்கு அர்த்தம் உண்டு என்றும், அதற்கான தேடல் தேவை என்றும் கூறி, தன் கருத்தை நூலில் வலியுறுத்துகிறார்.ஆகவே, தலைமைப் பண்பு அடைய விரும்பினால், இந்த நூலை விரும்பி படிக்கலாம்.


சமீபத்திய செய்தி