/ சுய முன்னேற்றம் / புத்தியைத் தீட்டுவோம்! புதுமையைக் காட்டுவோம்!
புத்தியைத் தீட்டுவோம்! புதுமையைக் காட்டுவோம்!
விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமையை வெளிப்படுத்தினால் முன்னேறலாம் என அறிவுரைக்கும் நுால். வாழ்வில் என்ன நடந்தது என்பதை விட, செயல்படும் விதமே முக்கியம் என உணர்த்துகிறது. தன்னம்பிக்கையோடு உயரும் வழிமுறைகளை அருட்செல்வர்கள் வாரியார், வள்ளலார், குன்றக்குடி அடிகளார் வாக்குகளை மேற்கோள் காட்டி வழிகாட்டுகிறது. துன்பம் துரத்தும் சூழலை மாற்றும் துணை, மன உளைச்சலை நீக்கும் காரணிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. வாழ்வில் வசந்தத்துக்கு ஆரோக்கியம் தேவை என்கிறது. நேரம் தவறாமை, தியானம், மற்றவரை மதிக்கும் பண்பு உடையோரே சிறப்பாக விளங்குவர் என கூறுகிறது. முன்னேற வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




