/ தத்துவம் / லைப் லெசன்ஸ் பிரம் ஏன்சியன்ட் லுார் (ஆங்கிலம்)
லைப் லெசன்ஸ் பிரம் ஏன்சியன்ட் லுார் (ஆங்கிலம்)
ராமாயண காவியத்தில் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்குரிய போதனைகளை மேற்கோள் காட்டி விளக்கும் நுால். தத்துவத்தை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே, பெரும்பாலான பிரச்னையை எளிதாக தீர்க்கலாம் என நம்பிக்கையை தருகிறது. மனிதர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேசி பழக வேண்டும் என எடுத்து இயம்புகிறது. சவாலை அணுகும் வழிமுறைகளை கூறுகிறது. மனச்சோர்வு, இயலாமை, கழிவிரக்கம் அணுகாமல் தற்காத்துக் கொள்ளும் வழியை சிறப்பாக எடுத்துரைக்கிறது. எடுத்துக்கொண்ட பணிக்கு எப்படி முன்னுரிமை தருவது, எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்பதை விளக்கி சொல்லி புரிய வைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




