/ வாழ்க்கை வரலாறு / இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு

₹ 140

இலிங்காயத்து இனம் பற்றி ஆராய்ந்து கருத்துகளை தெரிவிக்கும் நுால். பண்பாடு, சமூக அமைப்பு, பழக்க வழக்கம், நம்பிக்கை, சடங்கு முறைகள், வழிபாடு மற்றும் மணம், உறவு முறை குறித்த விபரங்களை தருகிறது.தனித்த பண்பாட்டு சடங்குகளுடன் வாழும் இலிங்காயத்து மக்கள் பற்றி களப்பணியில் சேகரித்த தகவல்களை ஆராய்ந்துள்ளது. தனித்தன்மையுள்ள வழிபாட்டு முறையை பின்பற்றுவதை உரைக்கிறது. இனப்பற்று, நிலவுடைமை, சொத்து அடிப்படையிலான ரத்த உறவுகள், உள்ளூர் சிறப்பு பேசுதல் என தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.மண வாழ்வு, மண முறிவு குறித்த விபரங்கள், துறவியை போற்றும் மனப்பான்மை என வழக்கங்களை குறிப்பிடுகிறது. தனித்த பண்பாட்டுடன் வாழும் ஒரு சமூகம் பற்றிய வரவு நுால்.– ஒளி


புதிய வீடியோ