/ இலக்கியம் / இலக்கியச் சந்திப்புகளும் இனிய மனப் பதிவுகளும்!
இலக்கியச் சந்திப்புகளும் இனிய மனப் பதிவுகளும்!
இலங்கை பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அமெரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்கள் நயம்பட விவரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், ஜப்பானிய கார்களுக்கு தான் மவுசு என குறிப்பிடுகிறது. அங்கு ஆண், பெண் ஓய்வின்றி உழைப்பதை எடுத்து கூறுகிறது. புத்தக படிப்பை விட, தொழிலில் தேர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவதாக குறிப்பிடுகிறது. தமிழில் வெளியான முக்கிய இலக்கிய படைப்புகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியம் சார்ந்து ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பேசப்பட்டுள்ளது. இலங்கை புகழ் இலக்கியம் பற்றி அறிய உதவும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




