/ இலக்கியம் / சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்!

₹ 160

சங்ககால பழக்கவழக்கம், நம்பிக்கை வாயிலாக தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையை அளவிட்டு கூறும் நுால். வாழ்க்கையை வளமாக்கும் நோக்கில் படைத்த இலக்கியங்கள், ஏதாவதொரு நீதியை நியதியாக்கி யுள்ளதை கணிக்கிறது. மனித ஒழுக்கம், அன்பியல், அருளியல், அறிவியல், பொருளியல், அரசியல், களவு, கற்பு, காதல் என திருக்குறள் கருத்து, மேவிய வாழ்வு தருவதாக கூறுகிறது. நன்மையை பெருக்குவது அறம்; தீமையை ஒடுக்குவது சட்டம் என்கிறது. அன்பிற்கு அடிமையாக்கி கொள்வதும், அறத்திற்கு அர்ப்பணிப்பதும் தமிழர் பண்பாடு என விளக்குகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு உதவும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ