/ கதைகள் / மகனுக்கொரு ராயல் சல்யூட்

₹ 250

நீதியை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சரளமான நடை மனம் ஒன்றி வாசிக்க உதவுகிறது. அரசுப் பணியில் இருந்த மகன், ஆடம்பர வாழ்விற்காக லஞ்சம் வாங்குவதையும், குற்ற உணர்வின்றி அதை தொடர்வதையும், நேர்மையான பெற்றோரால் மனம் திருந்தியதையும் முதல் கதை எடுத்துச் சொல்கிறது. பேராசையால் பண்பிழந்து போகும் மகன் பற்றிய திருப்பங்களு டன் அமைந்துள்ளது மற்றொரு சிறுகதை. காப்பி அடித்தே பாஸாகிய மகனை, அதிர்ச்சி வைத்தியத்தால் திருத்திய தந்தை பற்றிய கதை சிறப்பானது. திருப்தி ஏற்படுத்தும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி