மகா பெரியவா (பாகம் – 3) ஆங்கிலம்
ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாவின் வாழ்க்கை, அவரது ஆன்மிக செயல்பாடு, திருவுளங்கள் பற்றிய நுால். அனுபவமிக்க பத்திரிகையாளரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மகா பெரியவாவின் வாழ்க்கையில் நேர்ந்த விசேஷ ஆன்மிக அனுபவங்கள், அற்புதங்கள் மற்றும் பக்தர்களின் அனுபவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாசிக்கும்போது உணர்ச்சியும், ஆழமான ஆன்மிக அனுபவமும் வெளிப்படுகிறது. எளிமையான மொழி நடையில் அனுபவங்களை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மகா பெரியவா பக்தர்களுக்காக செய்த அற்புதங்கள், சாதாரண மக்களுடன் கொண்டிருந்த உறவு, தர்மம் மற்றும் விலங்குகளும், வேதப் பாதுகாப்பும் எனப் பல்வேறு பொருள்களில் உள்ளது. குடும்ப பிரசனைகளில் இருந்து மீட்டது, புண்ணியமும் பாவமும், சாதாரண மக்களோடு சமமாக நடந்துகொண்டது போன்ற நிகழ்வுகள் வாசகனை மனதளவில் கவரும் வகையில் அமைந்துள்ளன. அற்புதங்களால் பக்தர்களுக்கு நேர்ந்த மாற்றங்கள், தியானத்தின் சக்தி போன்றவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, பிற மொழி பேசும் பக்தர்களுக்கும் பெரியவா நினைவுகளை உலகமெங்கும் பரப்பும் முயற்சியாக உள்ளது. உணர்வுப்பூர்வமான ஆன்மிகப் பயணமாக அமைந்துள்ளது. வாசகர்களால் பெரிதும் பாராட்டு பெற்றுள்ளது. உண்மையான பக்தி தரும் தெய்வீக உணர்வு, கதை சொல்லல் முறையில் சிறப்பாக அமைந்துள்ளது. மரியாதை, பாசம் மற்றும் நேர்மை எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது. இந்திய ஆன்மிக பாரம்பரியத்தை உலக அளவில் எடுத்துச் செல்லும் ஆவல், புத்தகத்தில் தெரிகிறது. இந்திய பாரம்பரியத்தில் ஆர்வமுள்ளோருக்கு ஆன்மிக வெளிச்சம் தரும். தெய்வத்துடன் ஆன உறவு, பக்தி, அற்புதங்கள் மற்றும் வாழ்க்கை நெறிகளை கற்பித்து மனதை உருக்கும் புத்தகம். -– இளங்கோவன்




