/ ஆன்மிகம் / மகாபாரதத்தின் தெய்வீக புருஷர்கள்
மகாபாரதத்தின் தெய்வீக புருஷர்கள்
மகாபாரத கதைமாந்தர்களை ஆய்வு செய்துள்ள நுால்.பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரர், தருமன், துரியோதனன், கர்ணன், அர்ச்சுனன், அசுவத்தாமன், சகுனி, துருபதன், கிருஷ்ணன் பற்றியது. சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கில் கதைப்போக்கை விரிவாக விவாதித்து முடிவு தரப்பட்டுள்ளது. மகாபாரத காட்சிகள் புதிய கோணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அளவுக்கு மீறிய மோகத்தால் வரும் விளைவுகள், முறையற்ற உறவு முறைகள், பிடிவாதங்கள், தண்டனைகள், மீட்சிகள் எனப் பலவும் சுவைபட ஆராயப்பட்டுள்ளன. மகாபாரத நாயகன் கிருஷ்ணரா என விளக்கம் தரப்பட்டுள்ளது. மகாபாரதத்தை புரிய வைக்கும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு