/ வாழ்க்கை வரலாறு / மகாகவி பாரதியாரின் அன்பு வாழ்வும் அருள் எழுத்தும்

₹ 270

மகாகவி பாரதியின் பன்முக ஆளுமையை விவரிக்கும் நுால். பாரதியை தமிழின் காவலர், கடவுள் வழிபாட்டாளர், நாட்டு பற்றாளர், கவிஞர், கதாசிரியர், பேச்சாளர், நகைச்சுவை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல நிலைகளிலும் ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கிறது. எட்டயபுரம் காந்திமதி நாதன் ஆணவத்தை அடக்க, ‘பாரதி சின்னப் பயல்’ என ஈற்றடி வெண்பா பாடியது முதல், படைப்புகளை சான்றாகக் கொண்டுள்ளது. பாரதியை பண்பாட்டு காவலர், உளவியல் அறிஞர், பெண்ணிய படைப்பாளர், தனிப்பாடலாசிரியர், உயர்ந்தோரைப் போற்றும் உத்தமர் என பல நிலைகளில் போற்றுகிறது. பாரதி படைப்புகளை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்