/ வாழ்க்கை வரலாறு / மக்கள் போற்றிய சகலகலாவல்லி

₹ 375

இரண்டு செய்திகள் இணைந்த நுால். ஒன்று, நடிகை பானுமதி பற்றியும்; மற்றொன்று, சிங்கப்பூர் பற்றியும் உள்ளது. பானுமதியின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நடிப்பு, வாழ்வின் இறுதிக்காலம் போன்ற சுவையான நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. சினிமாவில் பிள்ளையார் சுழி, கையில் காயம், பாகவதரின் படம், பானுமதியின் கத்தி சண்டை, மறக்க முடியாத நினைவுகள் போன்ற, 23 தலைப்புகளில் தகவல்களை தருகிறது. ஜனாதிபதியிடம் விருது பெற்றதையும் குறிப்பிடுகிறது. மறுபகுதியில் சிங்கப்பூர் வளர்ச்சி பற்றி உள்ளது. எத்தனை உயர்வு, என்னவொரு சுத்தம், என்ன பண்பு என வியக்கும் அளவிற்கு உயர்த்தி சொல்கிறது. சிங்கப்பூர் வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம். சுற்றுலாவுக்கு உதவும் வழிகாட்டியாக உள்ளது.– பேராசிரியர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ