/ வாழ்க்கை வரலாறு / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
நாடக நடிகராய் துவங்கி, திரைப் படத்தால் வளர்ந்து, அரசியல் தலைவராய் உயர்ந்து, முதல்வராக பதவி வகித்த எம்.ஜி.ஆர்., வாழ்க்கையை பதிவு செய்துள்ள நுால். புரட்சி நடிகர் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும், மக்கள் திலகம் என்று பத்திரிகையாளர் தமிழ்வாணனும், பொன்மனச் செம்மல் என்று வாரியார் சுவாமிகளும் பட்டங்கள் தந்ததை குறிப்பிடுகிறது. எங்க வீட்டுப் பிள்ளை என புகழும் வகையில் அரசை இயக்கியது குறித்து விவரிக்கிறது. தமிழ் சினிமா துறையில் பாடல், இசை, கேமரா, எடிட்டிங், இயக்கம் என்ற சகல கலைகளிலும் கவனம் செலுத்தி உயர்ந்ததை எடுத்துரைக்கிறது. மரணத்தை வென்று காலனுக்கு வெற்றியை பரிசளித்ததாக குறிப்பிடுகிறது. எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்று நுால். – முனைவர் மா.கி.ரமணன்




