/ அரசியல் / மேற்கு வங்காளத்தின் சிம்ம சொப்பனம் மம்தா பானர்ஜி

₹ 60

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அதிரடி அரசியலை விவரிக்கும் நுால் . மத்திய ரயில்வே அமைச்சராக ஆற்றிய பணிகளை தருகிறது. மேற்கு வங்க முதல்வராக உரிமைகளை பெறுவதில் தயங்காமல் செயல்படுவதை குறிப்பிடுகிறது. மேற்குவங்க மகளிர் காங்கிரஸ் தலைவராக பதவிகள் வகித்ததை எடுத்துக்கூறுகிறது. காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை துவக்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் படுகொலை, டார்க் ஹாரிசன், மாற்றம் போன்ற புத்தகங்கள் எழுதியதை விவரிக்கிறது. உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவராக ‘டைம்’ பத்திரிகை தேர்வு செய்துள்ள தகவலையும் தருகிறது. அரசியல், நிர்வாகம், ஓவியம், கவிதை, எழுத்து என பல துறைகளில் செயலாற்றி வரும் மம்தாவை அறிய உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ