/ கவிதைகள் / மணல் உயிர்

₹ 200

மனித நேயத்துக்கு வழிமுறைகள கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரம் வெட்டுவதை கண்டு பறவை கள் துடிதுடிப்பதை, மனித குணத்துடன் பொருத்துகிறது. ‘பனையோலைக் கிண்ணத்தில்’ என்ற கவிதை, நவீன கிராமிய காதலை சொல்கிறது. தற்கொலை எண்ணத்தை, பழைய நினைவுகளால் மறக்க வைக்கிறது. ‘தினந்தோறும் வந்து விழுவதை’ என்ற கவிதை, சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள அறிவுறுத்துகிறது. கழிப்பறையில் விழுந்த காசை, யாருக்கும் தெரியாமல் எடுப்பதை, ‘ரகசிய காசு’ கவிதை படிப்பினையாக தருகிறது. மதுவால் குடும்பம் சீரழிந்ததை சுட்டிக்காட்டுகிறது. போரால் ஏற்படும் மரண குரல்களை, ‘ஈயத்தின் ஈரப்பதம்’ என்ற கவிதை, கல் நெஞ்சை கரைய வைக்கும் வகையில் உள்ளது. சமூக சிந்தனையுள்ள கவிதை தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை