/ கதைகள் / மனம் கவர் கள்வன்
மனம் கவர் கள்வன்
டியூசனில் வாலிபன் மீது ஏற்படும் முக்கோண காதலை மையமாகக் கொண்ட நாவல் நுால். கல்லுாரியில் காதலை வெளிப்படுத்தும் இளைஞனிடம், வேறு ஒருவரை விரும்புவதாகக் கூறுகிறாள் பெண். வீட்டில் பூகம்பத்தால் காதலை வெளிப்படுத்தியவனையே திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. பெற்றோர் முடிவால் சம்மதிக்கிறாள். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கணவன் விலகுகிறான். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் இந்த நாவல்.பக்குவமற்ற வயதில் வரும் காதலையும், ரகசிய திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு நேரும் கொடூரத்தையும் சொல்கிறது. பொறுமையும், தன்னம்பிக்கை, கல்வி, தனிமரமாய் நிற்கும் பெண்ணை எந்த அளவு உயர்த்தும் என்பதை எடுத்துரைக்கிறது. எளிய நடையில் அமைந்த நுால்.– மேதகன்