/ சுய முன்னேற்றம் / மனமே விழித்தெழு

₹ 130

மனதை மட்டும் அல்ல, முடங்கி கிடக்கும் உடலையும் முன்னேற்றப் பாதை நோக்கி எழுந்து ஓடச் செய்திருக்கும் நுால். குறிக்கோளை அடைய மனதிற்கு தேவையான நல்ல சக்திகளையும், மனதை முடக்கிப்போடும் தீய சக்திகளையும் குட்டிக் கதைகள், பாடல் வரிகள், திருக்குறளால் விளக்கியுள்ளார். புத்தகங்களில் படித்ததை, இலக்கை அடைய அறிஞர்கள் கையாண்ட சூட்சமங்களை, தன்னம்பிக்கை தரும் வகையில் தந்துள்ளார். குறிக்கோள் இல்லாதவர்கள், இருந்தும் அதை சேர முயலாதவர்கள், முயன்றும் தோற்பவர்களுக்கு வெற்றி பெற வழிகாட்டுகிறது, இந்த புத்தகம். குறிக்கோளை அடைய மட்டுமின்றி, சமூகத்தில் சிறப்பாக வாழவும் அறிவுரை வழங்குகிறது. துவண்டு போன மனங்கள் விழித்தெழ வாசிக்க வேண்டிய புத்தகம்.– தமிழ்நாடன்