/ சுய முன்னேற்றம் / மனதில் பதிந்த நினைவுகள்
மனதில் பதிந்த நினைவுகள்
சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் கற்றுத் தரும் பாடத்தை பதிவு செய்துள்ள நுால். மிகுந்த பாசம் வைத்த தாயே, ‘யார் நீ’ என்று கேட்ட ஒற்றை வார்த்தையால் உருகுலைந்து தற்கொலைக்குப் போன நிகழ்வு, நெஞ்சை நெகிழ வைக்கிறது. எழுத்தாளனுக்கு அங்கீகாரம் தருகிறது பொன்னாத்தாவில் கண்ணீர் நிகழ்வு. நேர மேலாண்மையை உணர்த்துகிறது கை நழுவிய வாய்ப்பு. அனுபவங்கள் வெறும் நிகழ்ச்சி அல்ல; பக்குவப்படுத்துகின்ற பாடம் என்பதை உணர்த்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்