/ மாணவருக்காக / மாணவ மணிகள்
மாணவ மணிகள்
மா ணவ – மாணவியருக்கு அறிவுரை கூறும் பாடல்களின் தொகுப்பு நுால். அதிகாலையில் படிக்க வேண்டியதன் அவசியத்தை, ‘காலைக் கருக்கல் பொழுதில் தான் கற்கும் பாடம் பதிவாகும்; வேலை நிகர்க்கும் கூர்மதியால் விரும்பி படித்தல் தினம் வேண்டும்...’ என இனிமையாக தருகிறது. பெற்றோரை மதிக்கும் அவசியத்தை, உள்ளத்தில் தங்குமாறு சொல்லும் பாங்கு சிறப்பானது. மாணவப் பருவத்திலே மொழிகளை கற்க வேண்டிய அவசியத்தை, ‘இந்திய மொழிகள் எல்லாமே இந்தியர் கற்றல் நன்றாமே... எந்த மொழியையும் ஒதுக்காமல் எல்லா மொழியும் கற்றிடுவாய்...’ என்கிறது. ஆரோக்கியத்தின் அவசியத்தை, ‘காற்று வீட்டுக்குள் தடையில்லாமல் வர வேண்டும்; முன்னே கதிரவன் ஒளி பரவி முனைப்பாய் விழ வேண்டும்...’ என அறிவூட்டும் நுால். – டாக்டர் கார்முகிலோன்