/ கதைகள் / மங்கள நாட்டு மாணிக்கங்கள்!
மங்கள நாட்டு மாணிக்கங்கள்!
ஏழ்மை, பொறாமை, சண்டைச் சச்சரவுகள் இல்லாத சமூகங்கள் உடைய நாட்டை கற்பனை செய்து எழுதப்பட்டுள்ள நுால். நாடு என்றால் உண்மை ஜனநாயகம் இருக்க வேண்டும். சட்டசபை, ஆள்பவர், நீதிமன்றம் மூன்றும் சரிவர இயங்க வேண்டும். சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எண்ணம், எழுத்து, கருத்து, வழிபாடு, பேச்சு போன்றவற்றில் சுதந்திரத்தை எடுத்து கூறுகிறது. இந்த செயல்கள் உடைய லட்சிய நாடு பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. நாடு வளர்ச்சி பெறுவதற்காக உழைத்தவர்களே கற்பனை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்களே மங்கள நாட்டு மாணிக்கங்களாக திகழ்வதாக குறிப்பிடுகிறது. சிறந்த நிர்வாகத்துக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




