/ ஆன்மிகம் / மணிகண்டன் மகிமைகள்
மணிகண்டன் மகிமைகள்
சபரிமலையில் சுவாமி அய்யப்பனை காண, புனித யாத்திரை செல்வோரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருவோரின் பயண அனுபவங்களை பகிர்கிறது. முந்தைய காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தர்ம சாஸ்தா கோவில், பெண்கள் சபரிமலை என்ற ராணி பெருநாடு பற்றிய விபரங்கள் உள்ளன. சித்திரை ஆட்ட திருநாள் வழிபாடு, ஆரியங்காவு அய்யன் திருக்கல்யாண பாரம்பரிய வழிபாடு, புஷ்கலா தேவி கோவில் வரலாறுகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பஜனை பாடல்கள், நமஸ்கார ஸ்லோகங்களும் உள்ளன. ஆன்மிக நாட்டம் கொண்டோருக்கு வரப்பிரசாதமாக அமைந்த நுால். -– இளங்கோவன்




