/ புத்தக மதிப்புரை / மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்
திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று நுால். பாண்டிய மன்னனின் அமைச்சராக விளங்கியதை குறிப்பிட்டு சான்று தருகிறது. நாட்டுக்காக குதிரைகள் வாங்க சென்றவரை, மன்னன் தண்டித்த போதிலும் சிவன் காத்தருளிய கதையை எளிமையாக முன்வைக்கிறது. மாணிக்கவாசகரின் இறை அனுபவங்களை நெகிழ்ச்சியூட்டும் வகையில் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. மாணிக்கவாசகரின் பாடல் பகுதிகளை இறை எழுச்சி குன்றாமல் தருகிறது. சிவபுராண நுட்பத்தை விளக்குகிறது. கீர்த்தி திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித்திரு அகவல், நீத்தல் விண்ணப்பம் பற்றி உரைக்கிறது. மாணிக்கவாசகரின் ஆளுமை, இறை பணிகளை படம் பிடிக்கும் ஆவண நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




