/ புத்தக மதிப்புரை / மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் வரலாற்றை விவரிக்கும் நுால். பிறந்த ஊர், காலம், பெற்றோர், பெயர் காரணம் பற்றிய மாறுபட்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. வரகுண பாண்டியனிடம் அமைச்சர் பொறுப்பு, நரியைப் பரியாக்கியது, தொண்டனுக்காக சிவபெருமான் பிரம்படி பட்டது, புத்தரை வாதில் வென்றது குறித்து விளக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருக்கோவையார் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. பாடிய பதிகங்களும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. திருவாசகச் சிறப்பை புகழ்ந்துரைக்கும் நான்மணிமாலை, வள்ளலார் திருமுறை, பழம் பாடல்களும் இடம்பெற்றுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




