/ கட்டுரைகள் / மனிதன் புனிதனாக...
மனிதன் புனிதனாக...
மனிதனை புனிதனாக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கவிதை அல்லது பொன்மொழியுடன் துவங்குகிறது. மேன்மையான அறங்களை வலியுறுத்தும் நிகழ்ச்சி களுடன், கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. பெரும்பான்மையான நிகழ்வுகள் நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளன. உலகில் வாழும் எல்லா உயிரினங்களிடமும் அன்பு காட்டுவது கடமை என்பதை வலியுறுத்துகிறது. அது பாலைவனத்தில் தண்ணீருக்காக நாக்கை தொங்கப்போட்டு அலையும் நாயைக் காட்டி விளக்கப்பட்டுள்ளது. இது படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. மனதை பண்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது. மனிதனை புனிதனாக மாற்ற உதவும் நுால். – முகிலை ராசபாண்டியன்