/ கதைகள் / மறைந்த கோயிலின் மாயாஜாலம்

₹ 199

பெங்களூரு நகரில் பெற்றோருடன் வாழும் சிறுமி பற்றிய நெடுங்கதை நுால். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடனான அனுபவம் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.இயல்பாக சம்பவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரம், கிராமம் என வாழ்க்கை நிலையின் போக்கையும், அன்றாட சிக்கல்களை தீர்த்து முன்னேறும் முறையையும் சொல்கிறது.மொத்தம், 13 துணை தலைப்புகளில் கதை சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொன்றையும் தனியாக வாசிக்கும் போது, சிறுகதை போல் மிளிர்கிறது. தொடர்ந்து வாசிக்கும் போது அனுபவத்தை சொல்லும் நெடுங்கதை போல் விரிகிறது. சிறுவர்களுக்கு அனுபவப் பாடம் புகட்டும் நுால்.– ராம்


சமீபத்திய செய்தி