/ வாழ்க்கை வரலாறு / மறக்கமுடியுமா?
மறக்கமுடியுமா?
வங்கி பணி அனுபவம் சார்ந்த சுயசரிதை நுால். மளிகை, பால் வியாபாரி, சலவை பணியாளரிடம், 1950களில் சமூகம் கொண்டிருந்த உறவை தெளிவாக தருகிறது. சென்னையின் அன்றைய நிலையை கண்முன் நிறுத்துகிறது. சாலையில் செல்வோரை கவனித்து, ‘தம்பி முடி கரடி போல் வளர்ந்திருக்கு...’ என சலுான் கடைக்காரர் கூறுவதை நினைவூட்டுகிறது. வளைகுடா போர் சூழல், பாதிப்பு குறித்த அனுபவங்களை பகிர்கிறது. ஏதும் அறியாத மக்கள் குண்டு வீச்சால் பலியாவதை விவரிக்கிறது. வங்கி பணிகளில் பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி பற்றி கூறப்பட்டுள்ள சுயசரிதை நுால். – டி.எஸ்.ராயன்




