/   கேள்வி - பதில் / மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!                      
மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!
ஒரு மனிதன் எப்படி வழிபட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் புத்தகம். நீரை விட்டு தரைக்கு வந்தால் மீன் இறந்து விடும். மனிதன் நீருக்குள் மூழ்கினால் இறந்து விடுவான். தவளை நீரிலும், நிலத்திலும் வாழும். இயற்கையின் படைப்பு விசித்திரங்கள் உடையது. யூத மதம் தன்னை காப்பாற்றிக்கொள்ள இயேசுவை தண்டித்ததாக கூறுகிறது. கடவுளை பற்றி தெரியாதோர், மத விருத்தியில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது. பகவத் கீதை, பைபிள், குரான், புத்தர், பரமஹம்ச யோகானந்தர் கருத்துகள் மனதில் பதியும் வண்ணம் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. ஆன்மிக செய்திகள் அலசப்பட்டுள்ளன. மதத்தை தவிர்த்து மனிதர்களை நேசிக்க கற்பிக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்







 
 
      