/ வாழ்க்கை வரலாறு / மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்
நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை உணர்ந்து, உணர்த்தியவர். அதனால் தான், மன்னர் குலத்தில் உதித்த நம்மாழ்வாருக்குச் சீடரானார். அவரைப் போற்றி, ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற நூலையும் பாடினார். மதுரகவி ஆழ்வாரின் வரலாறு மிக எளிய நடையில் நூலாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் வரலாற்று நூல்களில் தனிச்சிறப்புப் பெற்றது.