/ கதைகள் / மயில்வாகனன்

₹ 100

தமிழ்க்கடவுள் முருகன் வாழ்க்கை கதை, சித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் மற்றும் அறக்கருத்துக்களை வலியுறுத்துகிறது.முருகக்கடவுள் சிறப்பும், வாழ்க்கையும் படக்கதையாகியுள்ளது. முதலில் தட்ச காண்டம் துவங்கி, சிறிய பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களுடன், செய்திகள் தரப்பட்டுள்ளன.சிறுவர் சிறுமியர் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படங்களுடன் தரப்பட்டுள்ள விளக்கம், வசனம் எல்லாம் எளிமையாக உள்ளன. சிறுவர்களுக்கு உதவும் நுால்.– மதி


முக்கிய வீடியோ