/ கவிதைகள் / மழைத் தெய்வம்

₹ 150

உணர்வைத் தொடும் கவிதைகளின் தொகுப்பு நுால். தொடர்ந்து வாசித்தால் தெடர் போலவும், தனித்து படித்தால், 100 சிறுகவிதை துளிகள் போலும் ஜாலம் காட்டுகிறது. மழைத்துளியின் மகத்துவத்தை பல்வேறு வகையாக வர்ணித்து உணர்வு பெருக்கை ஊட்டுகிறது. உள்ளம் கவரும் புதுக்கவிதைகளின் தொகுப்பாக மலர்ந் துள்ளது. இயற்கையின் வண்ணங்கள், காதலின் மகத்துவம், பொன்மொழிகளின் சிறப்பை இணைத்து பலவர்ணங்களுடன் பொழிகிறது. ஒற்றை வரியில் சொற்களை சுருக்கி, ‘கட்டிக்காத்ததை கொட்டித்தீர்த்தது பருவமழை’ என வியப்பு ஏற்படுத்துகிறது. கவிதைகள் வாசிக்கும் போது எண்ணத்தில் புதுமை ஓசையை ஏற்படுத்துகின்றன. கனிவு, நெகிழ்வு, நம்பிக்கை, அன்பின் ஈர்ப்பை அழகிய சொற்கள் வழியாக வெளிப்படுத்தும் நுால். – ஒளி


புதிய வீடியோ