/ கதைகள் / மேல்நாட்டு மாப்பிள்ளை
மேல்நாட்டு மாப்பிள்ளை
இலங்கையில் பிறந்து, பிற நாடுகளில் வளர்ந்தோரை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் நடை தனித்த அழகுடன் உள்ளது. ஒவ்வொரு கதையும் எழிலான கோட்டு சித்திரத்துடன் இருப்பது மெருகூட்டுகிறது. சீர் வரிசையை எதிர்க்கும் பாத்திர படைப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு தேவையான கருத்துகளை கூறுகிறது. பிரமிக்க வைக்கும், ‘தேவை கொஞ்சம் அவகாசம்’ கதையில் கதாநாயகியின் உரை நெத்தியடி. படிப்பினை தரும் முன்னாள் தலைமை ஆசிரியை பாத்திரம் மனதில் நிற்கிறது. திருமணத்திற்கு பின், மணமக்கள் யாரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பது பற்றியது, சிறுகதைக்கு இலக்கணமாக உள்ளது. வாசிப்புக்கு உகந்த சிறுகதை நுால். – சீத்தலைச்சாத்தன்




