/ வாழ்க்கை வரலாறு / எம்.ஜி.யார்? மறைக்கப்பட்ட சில உண்மைகள்
எம்.ஜி.யார்? மறைக்கப்பட்ட சில உண்மைகள்
திரைப்படத் துறையில் பழி வாங்கும் போக்கு, ஆபாசம், அரசியல் ஊழல், வன்முறை கலாசாரத்தை தமிழகத்தில் வேரூன்ற விட்டதாக எம்.ஜி.ஆர்., பற்றி விமர்சிக்கும் நுால். திருப்பத்துார் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரை தி.மு.க., ஆதரித்தபோதும், அ.தி.மு.க.,வும் ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்., கூறியதுடன், காங்கிரஸ் இதை நிராகரித்தபோதும், தனி மேடை அமைத்து காங்கிரசை ஆதரித்தார் என்கிறது.வள்ளலாக பலருக்கு தெரிந்த எம்.ஜி.ஆர்., வருமான வரித் துறைக்கு மட்டும் படுகஞ்சனாகக் காட்சியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., பாடல்கள் பாலுணர்வைத் துாண்டுவதாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு மனிதனின் மறுபக்கத்தை காட்டும் நுால்.– டாக்டர் கலியன் சம்பத்து