/ சுய முன்னேற்றம் / மோர் + ரசம் = முன்னேற்றம்
மோர் + ரசம் = முன்னேற்றம்
‘மோர் + ரசம் = முன்னேற்றம்’ என்ற வித்தியாசமான தலைப்பை தந்துள்ள நுாலாசிரியரின் சிந்தனையே, இந்நுாலின் முதல் சிறப்பு. எந்த செயலையும், ஆர்வத்துடனும், சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை, அறிஞர்கள் பலரின், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்துள்ளது மேலும் சிறப்பு. டீ குடிப்பது குறித்து, ஆசிரியர் எழுதியிருக்கும் விஷயம், ‘இதில் கூட இவ்வளவு ரசனை மிக்க அம்சங்கள் உள்ளனவா?’ என, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சுய முன்னேற்றத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் அடங்கிய நல்ல நுால்.