/ மருத்துவம் / முடக்கிப்போடும் மூட்டு வலி
முடக்கிப்போடும் மூட்டு வலி
மூட்டு வலி சிகிச்சை முறை பற்றிய தகவல்களை உடைய நுால். கழுத்து, முதுகு, இடுப்பு, மூட்டு, குதிகால், தோள்பட்டை, முழங்கை வலி மற்றும் முடக்கு வாதத்துக்கான காரணங்கள், தீர்வுகள் தரப்பட்டுள்ளன. குண்டும் குழியான சாலைகளால் விளைவு, உடல் பருமன், துரித உணவு கலாசாரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. எலும்பில் மூட்டு பாதிக்கப்படுவது பற்றி அறியத்தருகிறது. பாதிப்பின் அறிகுறி, பரிசோதனை, சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைக்கிறது. பின் விளைவுகள், வலியை போக்க பயிற்சி செய்யும் முறை, தவிர்க்க வேண்டிய உணவுகள், இன்றியமையாத அறுவை சிகிச்சைகள் குறித்தும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. உடலில் வலியால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்




