/ கட்டுரைகள் / முடங்கலில் மலர்ந்த மலர்கள்

₹ 200

பல்வேறு பொருட்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நுால். கொரோனா தொற்றில் முடங்கிய போது மலர்ந்தவையாக விளங்குகின்றன. விளாத்திக்குளம் சுவாமிகள், கலாசேத்ராவை வடிவமைத்த கலைவாணி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருலோக சீதாராம் என மேதைகளை பற்றிய தகவல், கருத்துகளை செவ்வனே பதிவு செய்துள்ளது. விளாத்திக்குளம் மண்ணில் நடப்பதற்கு தியாகராஜ பாகவதர் விரும்பியது; பரதநாட்டிய அரங்கில் நடராஜர் சிலையை, ருக்மணி தேவி அருண்டேல் நிறுவியது; அம்பேத்கரை எரவாடாவில் காந்தியடிகள் பாராட்டியது என, அரிய தகவல்கள் உள்ளன. விழாக்கள் தொடர்பான கட்டுரைகளும் மணம் சேர்க்கின்றன. செய்திகள் கொட்டிக் கிடக்கும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


புதிய வீடியோ