/ கதைகள் / முகவரியில்லா முகங்கள்

₹ 100

ஏழையின் உயர்வுக்கு கல்வியே உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். அடித்தட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாளும் சாமி கும்பிடும் போது, ‘தொழில் நன்றாக நடக்க வேண்டும்’ என வேண்டிக் கொள்வர். ஆனால், பிணம் புதைக்கும் வேலை செய்பவர் அது போல் வேண்ட முடியுமா என அவலச்சுவையை வெளிப்படுத்துகிறது. அரசியல்வாதி கைப்பாவையாக ஆட்டம் போடும் குடிகாரத் தொண்டர் விசுவாசத்தை, ‘போஸ்டர்’ கதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆதரவற்றோரின் பசி அவர்கள் போன்றோருக்கு மட்டும் தான் தெரியும் என சொல்கிறது, ‘எதுவும் வீணாவதில்லை’ என்ற கதை. இதுபோல் மனித அவலங்களை காட்டி நேயம் வளர அறிவுறுத்தும் கதை தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை