/ புத்தக மதிப்புரை / முளைக்கும் விதைகள்

₹ 100

சிறுவர்--, சிறுமியருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எப்படி வளர்வது என்ற கதையுடன் துவங்குகிறது. ஒரு சிறுமி விதையை நடும் போது நடக்கும் செயல்பாடுகள் புரியும்படி விவரிக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்படி கற்பது என்ற தலைப்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சுலப கற்றலுக்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் சிறப்பு, உடற்பயிற்சியின் அவசியம், வீடு குறித்த புரிதல், அழகு குறித்த சிந்தனையை மையமாக உடைய கதைகளும் உள்ளன. ஒவ்வொரு கதையும், குழந்தைகளுடன் உரையாடுவது போல் எளிய நடையில் உள்ளன. அந்த கதைகள் குறித்த பயிற்சி வினாக்களும், அவை கூறும் அறிவியல் கருத்தும், பெட்டி செய்தியாக தரப்பட்டுள்ள தொகுப்பு நுால். – ஒளி