/ கட்டுரைகள் / முனைவர் மு.இளங்கோவன் புலமைநலம்
முனைவர் மு.இளங்கோவன் புலமைநலம்
இலக்கிய கட்டுரைகள் மீதான திறனாய்வு கருத்துகளின் தொகுப்பு நுால். தொல்காப்பிய மரபு, நாட்டுப்புறவியல், கட்டுரை களஞ்சியம், வாய்மொழி பாடல்கள், முடியரசனார் தமிழ்த்தொண்டு, பாரதிதாசன் பரம்பரை, அயலகத் தமிழறிஞர்கள் உள்ளிட்ட 10 பொருண்மைகளில் பயனுள்ள இலக்கிய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கியங்களில் கிராமிய செல்வாக்கு கூறுகளை அலசுகிறது. தற்கால இலக்கியங்களில் நாட்டுப்புறவியல் தாக்கங்களை எடுத்து காட்டுகிறது. அயல்நாட்டு தமிழறிஞர் இலக்கிய பணிகளை விவரிக்கிறது. பல வரலாற்று செய்திகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாளர்கள் முன்வைத்த கருத்தோட்டங்களில் இலக்கிய ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நுால். – மெய்ஞானி பிரபாகரபாபு




