/ வாழ்க்கை வரலாறு / முத்தரையர் சாம்ராஜ்ஜியம்
முத்தரையர் சாம்ராஜ்ஜியம்
தமிழகத்தில் முத்தரையர் வம்ச வரலாற்றை விரிவாக தரும் நுால். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலுார், பெரம்பலுார் பகுதிகள், ‘முத்தரையர் நாடு’ என விளங்கியதை கூறுகிறது. சங்க இலக்கியமான அகநானுாற்றில், ‘நீடுநிலை அரைய’ என்ற சொல் குறித்து விளக்கி முத்தரையர் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. வம்ச மன்னர்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. திருக்காட்டுப்பள்ளி செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கல்வெட்டு ஆதாரங்களுடன் முத்தரையர் கொடை பண்பு, உழைப்பின் மேன்மையை விளக்குகிறது. ஆய்வாளர்களுக்கு பயன் தரும் வரலாற்று நுால். – புலவர் சு.மதியழகன்




