/ வாழ்க்கை வரலாறு / என் சரித்திரம்
என் சரித்திரம்
தமிழ் பணியால் பெரும்புகழ் பெற்றவரின் சுயசரிதை நுால். தமிழகம் முழுதும் புதைந்து கிடந்த அரிய தமிழ் சுவடிகளை விடாமுயற்சியோடு தொகுத்த அனுபவம் வியப்பு ஏற்படுத்துகிறது. அந்த சுவடிகளை படித்து ஆராய்ந்து, படி எடுத்து பிழையின்றி பதிப்பித்த பாங்கு நெடுங்கதை போல் விரிகிறது. அரிய ஆராய்ச்சியுடன் முன்னுரை தந்து பழந்தமிழ் பெருமையை எடுத்துரைக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியதன் வழியாக தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை எடுத்துரைக்கிறது. ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்வு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. பழங்கால ஓலைச்சுவடிகளை கண்டு எடுத்து பதிப்பித்த கடினப்பணியை அறிய தரும் நுால். – சிவா




