/ வரலாறு / நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்...!

பக்கம்: 84 பாரதத்தின் பழம்பெருமை, கிரேக்க, சுமேரிய, எகிப்து, பாபிலோனிய நாகரிகங்களை விடவும் மிகவும் உயர்ந்தது. அதனால் தான், ஜெர்மானிய மாக்ஸ்முல்லர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இங்கு ஆர்வமுடன் வந்துள்ளனர் என்று துவங்கி, "இந்தியா வளர்கிறது,வல்லரசு ஆகிறது என்று, நூல் முடிகிறது.இடையில், 14 தலைப்புகளில், நாம் மறந்துவிட்ட நாட்டின் பெருமைகளை, உயர்த்திக் காட்டுகிறது இந்நூல். தலைநிமிர வைக்கிறது நம்மை. இந்து சமயம் பற்றிய வெளிநாட்டார் பாராட்டு, குமரிக்கண்டத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, உலகெங்கும் இருந்த சிவாலயங்கள், உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம், இந்து சமய வளர்ச்சி தகவல் கட்டுரைகள் போன்றவை, படிப்பவரை பிரமிக்க வைக்கின்றன.விலை மதிப்பில்லா இந்த நூலுக்கு, விலையும் குறிப்பிடவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை