நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
திருமால் மீது கொண்ட பக்தியில், ஆழ்ந்து விட்டவர்களான ஆழ்வார்கள் பன்னிருவரால், நூற்றெட்டு திருப்பதிகளில் கோவில் கொண்டுள்ள பெருமாளைப் பாடிய பக்திப் பாடல்களே, நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்.பாசுரங்களுக்கு எளிய நடையில், பொருளை உணர்த்தும் கருத்துரையை வரைந்துள்ளார் முனைவர். த.கோவேந்தன். ஆழ்வார்களின் பாசுரங்களில் இலக்கியச் சுவை, இயற்கை வருணனை, உவமை முதலிய அணிகள் சிறப்புடன் நிறைந்துள்ளன.ஆழ்வார்கள் பன்னிருவரின் வரலாறு, தசாவதாரக் கதைகள், தொடர்புடைய பிற கதைகள், பெரியவாச்சாண் பிள்ளை தொகுத்துள்ள பாசுரப்படி ராமாயணம் முதலியன சிறப்பான முறையில் கொடுக்கப் பெற்றுள்ளன.படிப்பதற்கும், பாடுவதற்கும் ஏற்ப அச்சிடப் பெற்றுள்ளமையால், முன்னரே பாசுரங்களில் பயிற்சியுடையோர்க்கும், புதிதாய் கற்போருக்கும் இந்நூல் பயனளிக்கும்.தெய்வ மணமும், இலக்கிய மணமும் கமழும் மிகச் சிறந்த பக்தி இலக்கிய நூல்.