/ கதைகள் / நடனத்திற்கு பின் (லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகள்)
நடனத்திற்கு பின் (லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகள்)
பக்கம்: 80 "அளவு கோல், "நடனத்திற்கு பின் என்னும் இரண்டு சிறு கதைகள் இந்நூலுள் அடக்கம். உருவகக் கதை வடிவில் அமைந்துள்ள "அளவு கோல் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஒரு குதிரை தன் கதையைக் கூறுவதாக அமைந்த, இக்கதையில் வரும் மனிதர், தான் யார் எவர் என்பதை இனங்காட்டி, மனிதத் தன்மையற்றவர்களாகத் தோலுரித்துக் காட்டுகிறது. "மசூர்கா நடனத்தின்போது, "வராங்காவிடம் அன்பு செலுத்துகிறான் "இவான்வாஸிலிவேவிச். அன்பு காதலாகிறது.பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி, அவனது உள்ளத்தைச் சுட்டெரிக்கிறது. வெறுப்படைந்த அவன் உள்ளம், மனிதாபிமானம் நாளடைவில் விரக்தி அடைந்து, அவனது காதலும் தேய்ந்து மறைகிறது. மனிதநேயஉணர்ச்சியின் சித்திரமாக இதைப் படைத்துள்ளார் ஆசிரியர். இலக்கியவாணர்களுக்கு நல்ல விருந்தும், மருந்துமாம் இந்நூல்