/ பொது / நக்கீரன் இயர்புக் 2010
நக்கீரன் இயர்புக் 2010
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:752)நக்கீரன் இயர்புக் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2009ம் ஆண்டு நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்கள், நிபுணர்களின் கட்டுரைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதை தவிர, தமிழகம், இந்தியா மற்றும் உலகம் என, ஒவ்வொரு பிரிவின் கீழும், விரிவான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு முறைகள் குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் வெளியாகி உள்ள இந்த இயர்புக், வேலை வாய்ப்பு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.